/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த குன்றத்துார் மலை ஆக்கிரமிப்பு
/
பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த குன்றத்துார் மலை ஆக்கிரமிப்பு
பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த குன்றத்துார் மலை ஆக்கிரமிப்பு
பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த குன்றத்துார் மலை ஆக்கிரமிப்பு
ADDED : ஏப் 28, 2024 04:45 AM

குன்றத்துார், : பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த குன்றத்துார் மலை மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தொல்லியல் துறையினர் மலையை பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுற்றியுள்ள மலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு, 1956ல் நடந்த அகழாய்வில் பெருங்கற்கால மக்களின் வாழ்விடங்கள், கல்லறைகள், ஆயுதங்கள் கண்டறியப்பட்டன. தற்போது, இந்த மலை முறையான பராமரிப்பின்றி உள்ளது.
இதனால், மலையை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. 350க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. குன்றத்துார் நகராட்சி நிர்வாகம் சார்பில், மலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், ஆக்கிரமிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
தொல்லியல் சின்னங்களும் சேதமடைகின்றன. மலை மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைகளை வரையறை செய்து, மலையை சுற்றி வேலி அமைத்து, பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

