/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டத்தில் 280 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்வு கூட்டத்தில் 280 மனுக்கள் ஏற்பு
ADDED : டிச 02, 2025 06:15 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடந்த மக்கள் நலன் காக்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 280 மனுக்கள் வரப்பெற்றன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று நடந்தது.
இதில் விவசாய மின் இணைப்பு, மின்னழுத்த குறைபாடு, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 280 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பின், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
இதில், முதல் பரிசு பெற்ற எட்டு மாணவர்களுக்கு தலா 1,000 ரூபாய், இரண்டாம் பரிசு பெற்ற ஆறு மாணவர்களுக்கு தலா 5,00 ரூபாய், மூன்றாம் பரிசு பெற்ற ஐந்து மாணவர்களுக்கு தலா 250 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் 27 பேருக்கு தையல் இயந்திரம், இருவருக்கு சக்கர நாற்காலிகளையும், கலெக்டர் சினேகா வழங்கினார்.

