செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெல் பயிரை பாதுகாக்க ஆலோசனை / நெல் பயிரை பாதுகாக்க ஆலோசனை
/
செங்கல்பட்டு
நெல் பயிரை பாதுகாக்க ஆலோசனை
ADDED : டிச 02, 2025 06:10 AM
வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி அறிக்கை: தற்போது, 'டிட்வா' புயலால் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், வெவ்வேறு நிலையில் உள்ள சம்பா பருவ நெற்பயிர்களை, மழை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும். மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் பயிர் இழப்பை தடுக்க, உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். நீரை வடித்து வேர் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க செய்ய வேண்டும். பயிர் முதிர்ச்சி அடைந்த நிலையில், தானியங்கள் முளைப்பதையும், நிற மாற்றத்தையும் தவிர்க்க, வயலில் தேங்கியுள்ள நீரை முழுமையாக வடிக்க வேண்டும். வடிகட்டப்படும் அதிகடியான நீரை வீணாக்காமல், அவற்றை பண்ணைக் குட்டைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் மீண்டும் பயன்படுத்தலாம். இதனால், நிலத்தின் நீர்மட்டம் உயரும். மேலும், விவசாயிகள் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆலோசனை பெற, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.