/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மயான பாதையை சீரமைக்க ஆத்துார் கிராமத்தினர் கோரிக்கை
/
மயான பாதையை சீரமைக்க ஆத்துார் கிராமத்தினர் கோரிக்கை
மயான பாதையை சீரமைக்க ஆத்துார் கிராமத்தினர் கோரிக்கை
மயான பாதையை சீரமைக்க ஆத்துார் கிராமத்தினர் கோரிக்கை
ADDED : நவ 14, 2025 10:17 PM

அச்சிறுபாக்கம்: ஆத்துார் ஊராட்சியில் உள்ள மயான பாதையை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் ஊராட்சி உள்ளது.
இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, மயானத்திற்குச் செல்லும் பாதையோரம் முள் செடிகள் வளர்ந்து, பாதையும் கடுமையாக சேதமடைந்து உள்ளது. இதனால், உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் போது, கிராமத்தினர் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, ஆத்துார் மயான பாதையை சீரமைக்க, வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.

