/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பிடே ரேட்டிங்' ஓபன் செஸ் சென்னை வீரர் சாம்பியன்
/
'பிடே ரேட்டிங்' ஓபன் செஸ் சென்னை வீரர் சாம்பியன்
'பிடே ரேட்டிங்' ஓபன் செஸ் சென்னை வீரர் சாம்பியன்
'பிடே ரேட்டிங்' ஓபன் செஸ் சென்னை வீரர் சாம்பியன்
ADDED : டிச 02, 2025 06:22 AM

சென்னை: 'பிடே ரேட்டிங்' ஓபன் சதுரங்க போட்டியில், சென்னை வீரர் பிரசன்னா சாம்பியன் கோப்பை வென்றார்.
குருநானக் கல்லுாரி சார்பில், சிங்க்ஸ் காம்பிட்- 2வது பதிப்பின், சர்வதேச பிடே ரேட்டிங் ஓபன் சதுரங்க போட்டி, வேளச்சேரியில் உள்ள கல்லுாரி வளாகத்தில் கடந்த 27ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
போட்டியில்,. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு கிராண்ட் மாஸ்டர், 288 சர்வதேச ரேட்டிங் வீரர்கள் உட்பட மொத்தம், 352 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
தினமும், தலா இரண்டு சுற்றுகள் விதம், எட்டு சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடந்தன.
எட்டாவது சுற்று முடிவில், சென்னை வீரர்கள் பிரசன்னா, 28; விஜய் ஸ்ரீராம், 22; அஜேஷ், 17; சத்தீஷ்கரின் ஸ்பார்ஷ் கண்டல்வால், 24 ஆகியோர், தலா ஏழு புள்ளிகளில் முன்னிலை இருந்தனர்.
'டை - பிரேக்கர்' கணக்கின் அடிப்படையில் நான்கு வீரர்களும் முறையே முதல் நான்கு இடங்களை கைப்பற்றி, ரொக்க பரிசுகளை வென்றனர்.
முதலிடத்தை பிடித்த சென்னை வீரர் பிடே மாஸ்டர் பிரசன்னா, 1 லட்சம் ரூபாய் மற்றும் சாம்பியன் கோப்பை வென்றார்.

