/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் பூட்டை உடைத்து வெள்ளி வேல் திருட்டு
/
கோவில் பூட்டை உடைத்து வெள்ளி வேல் திருட்டு
ADDED : டிச 09, 2025 06:52 AM

சூணாம்பேடு: கொளத்துார் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த காணிக்கை பணம் மற்றும் வெள்ளி வேலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
சூணாம்பேடு அடுத்த கொளத்துார் கிராமத்தில், பள்ளம்பாக்கம் செல்லும் சாலையில் செல்லியம்மன் கோவில் உள்ளது.
இதில் அம்மணியம்மாள், 60, என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பூஜையை முடித்து விட்டு, கோவிலை பூட்டி விட்டுச் சென்றார்.
நேற்று காலை 7:30 மணிக்கு பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்த போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்ததால், கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்து கிராமத்தினர் பார்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு, 5,000 ரூபாய் காணிக்கை பணம் மற்றும் 3.5 அடி உயர வெள்ளி வேல் திருடு போனது தெரிந்தது. சூணாம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

