/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளால் ஆபத்து
/
மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளால் ஆபத்து
ADDED : டிச 02, 2025 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி ருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில், விரால்பாக்கம் பகுதியில் மின் தடம் செல்கிறது.
இங்குள்ள தைல மரம் மற்றும் வேப்ப மரத்தின் கிளைகள், மேற்கண்ட மின் தட கம்பிகளை உரசும் வகையில் உள்ளன.
காற்றடிக்கும் போது மரக்கிளைகள், மின்கம்பிகளுடன் உரசும் போது, வெங்கூரில் உள்ள மின்மாற்றி பழுதடைந்து மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, மின்கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ள மரத்தின் கிளைகளை அகற்ற வேண்டும்.
- சே.சங்கீதா, திருப்போரூர்.

