/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சின்னகயப்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்
/
சின்னகயப்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்
ADDED : நவ 14, 2025 01:32 AM

சித்தாமூர்:சின்னகயப்பாக்கம் கிராமத்தில், தேசிய வேளாண் நிறுவனம் சார்பாக, இலவச பொது மருத்துவ முகாம், நேற்று நடந்தது.
சித்தாமூர் அருகே சின்னகயப்பாக்கம் கிராமத்தில், தேசிய வேளாண் நிறுவனம் மற்றும் வெல்ஸ் பார்கோ நிறுவனம் சார்பில் நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில் காய்ச்சல், சளி, இருமல், நீரிழிவு, தோல், பார்வை குறைபாடு, இதயம், நரம்பு, இரைப்பை, குடற்புழு போன்ற நோய்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
கண், ரத்தம், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு, இலவசமாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதில், சின்னகயப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

