/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பள்ளி கட்டடம் முகையூரில் துவக்கம்
/
அரசு பள்ளி கட்டடம் முகையூரில் துவக்கம்
ADDED : நவ 12, 2025 10:33 PM
கூவத்துார்: முகையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 68 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, நான்கு வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டடம், நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
கூவத்துார் அடுத்த முகையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
போதிய வகுப்பறைகள் இல்லாமல், பள்ளி மாணவர்கள் சிரமப்பட்டு வந்ததால், புதிய பள்ளி கட்டடம் அமைக்க அதிகாரிகளிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், 2022 - 23 செய்யூர் சட்டசபை மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 68.22 லட்சம் ரூபாயில், இரண்டு தளங்களில் தலா இரண்டு வகுப்பறைகள் என, மொத்தம் நான்கு வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
புதிய பள்ளி கட்டடத்தின் திறப்பு விழா, நேற்று நடந்தது. செய்யூர் எம்.எல்.ஏ., பாபு பங்கேற்று, புதிய பள்ளி கட்டடத்தை துவக்கி வைத்தார்.

