செய்தி எதிரொலி: எட்டு மாதங்களாக மந்தம் பாளையூர் சாலை சீரமைப்பு
செய்தி எதிரொலி: எட்டு மாதங்களாக மந்தம் பாளையூர் சாலை சீரமைப்பு
UPDATED : ஜூலை 29, 2026 06:54 PM
ADDED : ஜூலை 29, 2026 06:24 PM
செய்யூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக மந்த நிலையில் நடந்து வந்த பாளையூர் சாலை பணி சீரமைக்கப்பட்டது.
செய்யூர் அருகே பாளையூர் கிராமத்தில் இருந்து தண்ணீர் பந்தல் வழியாக செய்யூர் செல்லும் தார் சாலை உள்ளது.
இந்த சாலையை பாளையூர், ஆற்காடு, அமந்தங்கரணை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சித்தார்காடு - பாளையூர் இடையேயான சாலை சேதமடைந்து பத்து ஆண்டுகளாக சீரமை க்கப்படாமல் இருந்தது.
அப்பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில், இந்த சாலையை சீரமைக்க 1.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பின் தனியார் நிறுவனத்திற்கு 'டெண்டர்' விடப்பட்டு, கடந்தாண்டு நவ., மாதம் சீரமைப்பு பணிகள் தொடங்கின.
பணி தொடங்கி எட்டு மாதங்களாக, சீரமைப்பு பணி மந்த நிலையில் நடந்து வந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது. இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கடந்த சில தினங்களுக்கு முன் சாலை சீரமைக்கப்பட்டது.
