/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை சாலையில் அபாய பள்ளத்தால் பீதி
/
மாமல்லை சாலையில் அபாய பள்ளத்தால் பீதி
ADDED : டிச 09, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மா மல்லபுரத்தில், கலங்கரை விளக்கம் அடிவாரத்தில், ஐந்து ரதங்கள் வீதி - பொதுப்பணித் துறை சாலை சந்திப்பு பகுதியில், சிறிய பள்ளம் உருவாகி, தற்போது பெரிதாகி வருகிறது. இதையொட்டி கைவினை பொருட்கள் விற்பனைக் கடைகள், தொல்லியல் துறை நுழைவுச் சீட்டு மையம் ஆகியவை உள்ளன.
அங்கு செல்லும் பயணியர், கவனமின்றி பள்ளத்தில் சிக்கி, தடுமாறி விழுகின்றனர். கார், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி பழுதடைகின்றன. நகராட்சி நிர்வாகம், இந்த பள்ளத்தை மூடி சீரமைக்க வேண்டும்.
- கா.தேவராஜ்,
மாமல்லபுரம்.

