/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடப்பாக்கத்தில் டயர் வெடித்து நடுரோட்டில் நின்ற புதுச்சேரி அரசு பஸ்

ADDED : டிச 09, 2025 06:51 AM

செய்யூர்: காரைக்காலில் இருந்து சென்னைக்கு வந்த புதுச்சேரி அரசு பேருந்து, டயர் வெடித்து நடுரோட்டில் நின்றதால், பயணியர் அவதிப்பட்டனர்.
புதுச்சேரி அரசு பேருந்து ஒன்று, நேற்று காலை காரைக்காலில் இருந்து, 40க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக் கொண்டு, சென்னை நோக்கி சென்றது.
இப்பேருந்து, காலை 10:00 மணியளவில், கடப்பாக்கம் பகுதியில் சென்ற போது, திடீரென பேருந்தின் டயர் வெடித்துள்ளது. இதனால், பேருந்து நடுவழியில் நின்றது.
பேருந்தில் இருந்த பயணியர் இறக்கப்பட்டனர். பின், மாற்று பேருந்துக்காக காத்திருந்து சிரமப்பட்டனர்.
அதன் பின், இப்பேருந்தில் பயணம் செய்த அனைவரும், மாற்றுப் பேருந்து ஒன்றில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.