/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடலுார் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்
/
கூடலுார் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்
கூடலுார் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்
கூடலுார் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுகோள்
ADDED : டிச 07, 2025 06:05 AM

மறைமலைநகர்: மறைமலை நகர் அடுத்த கூடலுார் ஏரிக்கரை சாலையில், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கூடலுார் -- கோவிந்தாபுரம் சாலை 2 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலையை கருநிலம், கோவிந்தாபுரம், மருதேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி, மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த தடத்தில் பேருந்து வசதி இல்லாததால், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சமீப காலமாக இந்த தடத்தில் சரக்கு வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன.
இவை அசுர வேகத்தில் செல்வதால், விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே, கூடலுார் ஏரிக்கரை சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
கூடலுார் ஏரிக்கரை சாலை, 15 அடி அகலம் உடையது. இதில் ஒரு பக்கம் ஏரியும், மற்றொரு பக்கம் அடர்ந்த புதரும் உள்ளன.
மேலும், இச்சாலையில் மூன்று முக்கிய வளைவுகள் உள்ளன. கடுமையாக சேதமடைந்து இருந்த இந்த சாலை, கடந்தாண்டு புதிதாக அமைக்கப்பட்டது.
அதில் இருந்து பள்ளி பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் அதிவேகத்தில் செல்வதால், கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கடந்த காலங்களில் இந்த சாலையில், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, சாலையின் நுழைவு பகுதியில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன. அதேபோல, மீண்டும் தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

