/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவளம் அருகே நீர்த்தேக்கம் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்
/
கோவளம் அருகே நீர்த்தேக்கம் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்
கோவளம் அருகே நீர்த்தேக்கம் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்
கோவளம் அருகே நீர்த்தேக்கம் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 09, 2025 06:53 AM

திருப்போரூர்: கோவளம் அருகே நீர்த்தேக்கம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
திருப்போரூர் அருகே இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., சாலை இடையே பகிங்ஹாம் கால்வாய் உள்ளது. இங்கு இயற்கையாகவே மீன், நண்டு, இறால், கிளிஞ்சல்கள் வளர்கின்றன. இப்பகுதி மீனவர்கள், பகிங்ஹாம் கால்வாயில் மீன் பிடித்து வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர்.
இந்நிலையில் கோவளத்தில், 471 கோடி ரூபாயில், 4,375 ஏக்கரில், சென்னையின் 6வது நீர்த்தேக்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு, மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இதுதொடர்பாக, திருப்போரூர் அடுத்த கோவளத்தில், மீனவர் பஞ்சாயத்து சார்பில் நேற்று, ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், மாமல்லபுரம் முதல் கானத்துார் ரெட்டிக்குப்பம் பகுதி வரை உள்ள மீனவர்கள், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

