/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு இடத்தில் கட்டப்பட்ட கோவில் வருவாய்த்துறை தடுத்து நிறுத்தம்
/
அரசு இடத்தில் கட்டப்பட்ட கோவில் வருவாய்த்துறை தடுத்து நிறுத்தம்
அரசு இடத்தில் கட்டப்பட்ட கோவில் வருவாய்த்துறை தடுத்து நிறுத்தம்
அரசு இடத்தில் கட்டப்பட்ட கோவில் வருவாய்த்துறை தடுத்து நிறுத்தம்
ADDED : டிச 07, 2025 06:15 AM

செய்யூர்: நயினார்குப்பத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் அய்யப்பன் பூஜைக்காக கட்டப்பட்ட கோவில் கட்டுமானப் பணிகளை, வருவாய்த் துறையினர் நேற்று தடுத்து நிறுத்தினர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நயினார்குப்பம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராமத்திற்கு உட்பட்ட சர்வே எண் 116/3ல், வாஞ்சி அரசு புறம்போக்கு வகைப்பாட்டை சேர்ந்த இடத்தில், கிராம மக்கள் சிலர் அய்யப்பன் கோவில் பூஜைக்காக, கான்கிரீட் கல் வைத்து கட்டடம் கட்டினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர், நேற்று மதியம் 12:00 மணியளவில் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தி, கட்டுமானத்தை அகற்றும்படி, மக்களிடம் தெரிவித்தனர்.