ADDED : ஜூலை 02, 2026 01:50 AM

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் -- பாலுார் சாலை இடையே உள்ள மரக்கிளைகளால் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்துடன் சென்று வருகின்றனர்.
சிங்கபெருமாள் கோவில் - பாலுார் சாலை 13 கி.மீ., துாரம் கொண்டது. வெண்பாக்கம் ரெட்டிபாளையம், சாஸ்திரம்பாக்கம், கொளத்துார் உள்ளிட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலையாகவும் உள்ளது.
கொளத்துார், வெங்கிடாபுரம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள ராட்சத மரக்கிளைகள் சாலையின் குறுக்கே தாழ்வாக செல்கின்றன. இதனால், அவ்வழியே செல்லும் சரக்கு வாகனங்களின் மேற்பகுதி கிளைகளில் மோதி விபத்து ஏற்பட்டு வருகின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
