/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளர் பகுதியில் சாலை அமைக்க ரூ.13 லட்சம் ஒதுக்கீடு
/
இருளர் பகுதியில் சாலை அமைக்க ரூ.13 லட்சம் ஒதுக்கீடு
இருளர் பகுதியில் சாலை அமைக்க ரூ.13 லட்சம் ஒதுக்கீடு
இருளர் பகுதியில் சாலை அமைக்க ரூ.13 லட்சம் ஒதுக்கீடு
ADDED : டிச 07, 2025 06:00 AM
செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்த ஈசூரில், இருளர் வசிக்கும் பகுதியில் சாலை அமைக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுராந்தகம் அடுத்த ஈசூர் கிராமத்தில், இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில், சாலைகள் கடுமையாக சேதமடைந்து இருந்தன. இதனால், இவ்வழியாக செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அதன் பின், சாலை வசதி கோரி, இருளர் இன மக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க, ஊரக வளர்ச்சித் துறைக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து, இருளர் பகுதியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், கான்கிரீட் சாலை அமைக்க, 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
'இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கப்படும்' என, ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.

