ADDED : ஜன 27, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:வள்ளலார் பிறந்த நாள் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டன.
இந்நிலையில், மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டாங்கொளத்துார், கோவிந்தாபுரம், திருக்கச்சூர் உள்ளிட்ட பல இடங்களில், இரண்டு நாட்களாக கள்ளத்தனமாக மது விற்பனை ஜோராக நடந்தது.
குறிப்பாக, மறைமலை நகர் காவல் நிலையத்தின் பின்புறம், 100 மீட்டர் தொலைவில், இருசக்கர வாகனத்தில் வைத்து மது விற்பனை நடைபெற்றது.
அதேபோல, செங்கல்பட்டு நகரின் பல இடங்களில், ஸ்கூட்டர்களின் பெட்டிகளில் வைத்து, மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.

