/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.2.25 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறைகள் திறப்பு
/
ரூ.2.25 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறைகள் திறப்பு
ரூ.2.25 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறைகள் திறப்பு
ரூ.2.25 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறைகள் திறப்பு
ADDED : டிச 07, 2025 05:59 AM
திருப்போரூர்: மேலக்கோட்டையூரில், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட, 2.25 கோடி ரூபாய் மதிப்பிலான வகுப்பறை கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று,'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறந்து வைத்தார்.
திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூரில், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இதற்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, 'தாட்கோ' திட்டத்தின் கீழ், 2.25 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு புதிய வகுப்பறைகள், ஒரு அறிவியல் ஆய்வகம் ஆகியவை கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் இந்த வகுப்பறைகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறந்து வைத்தார்.
இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மேலக்கோட்டையூர் ஊராட்சி தலைவர் கவுதமி ஆறுமுகம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்றார்.
ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், வார்டு கவுன்சிலர் ரமேஷ், தாட்கோ பொறியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

