/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலி செய்வதறியாது திணறும் எஸ்.ஐ.,க்கள்
/
இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலி செய்வதறியாது திணறும் எஸ்.ஐ.,க்கள்
இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலி செய்வதறியாது திணறும் எஸ்.ஐ.,க்கள்
இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலி செய்வதறியாது திணறும் எஸ்.ஐ.,க்கள்
ADDED : பிப் 20, 2025 11:52 PM
செம்மஞ்சேரி,செம்மஞ்சேரி காவல் நிலையத்தில், சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக கிளாட்ஸன் ஜோஸ் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக சக்திவேல் ஆகியோர் பணிபுரிந்தனர்.
இருவரும் டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று, வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.ஆனால், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் காலியான இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இதனால், சப் - இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மிகவும் சிரமப்படுகின்றனர். முக்கிய முடிவுகள் எடுப்பது, குற்றச் செயல்களை கண்காணிப்பது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது, கைது நடவடிக்கை எடுப்பது, பழைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாமல் தடுமாறுகின்றனர்.
மேலும், போலீசார் பற்றாக்குறையால் திருட்டு, வழிப்பறி, மெட்ரோ ரயில் பணித்தளத்தில் திருட்டு போன்ற சம்பவங்களை தடுப்பதில் சிரமப்படுகின்றனர்.
இந்த காவல் நிலைய எல்லையில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம், சோழிங்கநல்லுார் நீதிமன்றம் ஆகியவையும் உள்ளன.
இங்கு, தினமும் மக்கள் கூடுவதால், ஆர்ப்பாட்டம் மற்றும் இதர சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.இதுபோன்ற நேரத்தில், இன்ஸ்பெக்டர் களத்தில் இருந்து தடுப்பு நடவடிக்கை எடுப்பது அவசியம்.
அதனால், இந்த காவல் நிலையத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

