/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருத்தக்க தேவர் தெருவில் மழைநீரால் அவதி
/
திருத்தக்க தேவர் தெருவில் மழைநீரால் அவதி
ADDED : டிச 09, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ம றைமலை நகர் நகராட்சியில், திருத்தக்க தேவர் தெருவில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.
மழை பெய்தால் இச்சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தேங்கிய மழைநீரை, நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றுகின்றனர். ஆனால், தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு இல்லை. தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, இப்பகுதி மக்கள் தவிக்கின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வாக, தெருக்களில் மழைநீர் தேங்காமல் இருக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- லட்சுமி நாராயணன்,
மறைமலை நகர்.

