/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீச்சலில் 5 தங்கம் அள்ளிய வேலம்மாள் பள்ளி மாணவன்
/
நீச்சலில் 5 தங்கம் அள்ளிய வேலம்மாள் பள்ளி மாணவன்
நீச்சலில் 5 தங்கம் அள்ளிய வேலம்மாள் பள்ளி மாணவன்
நீச்சலில் 5 தங்கம் அள்ளிய வேலம்மாள் பள்ளி மாணவன்
ADDED : டிச 02, 2025 06:21 AM

சென்னை: மாவட்ட நீச்சல் போட்டியில், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர் எரிக் ஈத்தன், ஐந்து தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
சென்னை மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான 31வது நீச்சல் போட்டி, சேத்துப்பட்டில் உள்ள 'ஆர்கா' நீச்சல் குளத்தில் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பல்வேறு வயது பிரிவுகளில் பங்கேற்றனர்.
இதில், 8 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் எரிக் ஈத்தன், 8, போட்டியிட்டு, ஐந்து தங்கப் பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளார். இவர், 50 மீ., ப்ரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பிரஸ்ட் ஸ்ட்ரோக், பட்டர் பிளை மற்றும் 100 மீ., தனிநபர் மெட்லி ஆகிய பிரிவுகளில், முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.

