/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நகராட்சி தொடக்க பள்ளி அருகே தேங்கும் தண்ணீரால் சீர்கேடு
/
நகராட்சி தொடக்க பள்ளி அருகே தேங்கும் தண்ணீரால் சீர்கேடு
நகராட்சி தொடக்க பள்ளி அருகே தேங்கும் தண்ணீரால் சீர்கேடு
நகராட்சி தொடக்க பள்ளி அருகே தேங்கும் தண்ணீரால் சீர்கேடு
ADDED : டிச 09, 2025 06:55 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி தொடக்கப்பள்ளி வளாக பகுதியில் தேங்கும் தண்ணீரை அகற்ற வேண்டும் என, கோரிக்கை
எழுந்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது.
இப்பள்ளி வளாகம் அருகே, கழிவுநீருடன் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதைக் கடந்து, பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளது.
இதுதொடர்பாக, நகராட்சி நிர்வாகத்திடம், பெற்றோர் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுமட்டும் இன்றி, சாலையில் ஆங்காங்கே கழிவுநீருடன் தண்ணீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
அதனால், கொசு உற்பத்தி இடமாக மாறி, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி, சாலையில் தேங்கியுள்ள கழிவுநீருடன் கலந்த தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

