ADDED : ஜூலை 03, 2026 02:25 AM
அ நிறம் | அளவு
திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே வடமாநில தொழிலாளி ஒருவர் சாலையை கடக்கும்போது வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிதுபால், 43, இவர் கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் பகுதியில் வசித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு, கேளம்பாக்கம் - வண் டலுார் சாலையில், கண்டிகை யில் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
