/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி பேருந்து விபத்தில் 11 பேர் காயம்
/
பள்ளி பேருந்து விபத்தில் 11 பேர் காயம்
UPDATED : மார் 22, 2024 12:14 PM
ADDED : மார் 22, 2024 12:14 AM

குன்றத்துார்,
குன்றத்துார், திருமுடிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் 30 பேர், பூந்தண்டலத்தில் உள்ள தனியார் பள்ளி மையத்தில் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு நாட்களில் திருமுடிவாக்கம் அரசு பள்ளி மாணவர்களை, தனியார் பள்ளி பேருந்தில் அழைத்துச் செல்வது வழக்கம்.
இதன்படி, நேற்று தேர்வு எழுதிய மாணவர்களுடன், பூந்தண்டலம்-- - பழந்தண்டலம் சாலையில், மாணவர்களுடன் பேருந்து சென்றது. அப்போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதி கவிழ்ந்தது.
இதில், மாணவர்கள் 11 பேர் காயமடைந்தனர்.
அங்கிருந்தோர் மாணவர்களை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

