/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் மே 1ம் தேதி இறுதிப்போட்டி
/
கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் மே 1ம் தேதி இறுதிப்போட்டி
கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் மே 1ம் தேதி இறுதிப்போட்டி
கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் மே 1ம் தேதி இறுதிப்போட்டி
ADDED : ஏப் 28, 2024 01:01 AM

சென்னை:தாம்பரத்தில் இயங்கிவரும் சாய்ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், கல்லுாரி நிறுவனர் லியோ முத்து நினைவுக் கோப்பை, இரண்டாம் ஆண்டு, அகில இந்திய கல்லுாரிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கடந்த 23ம் தேதி துவங்கின.
சாய்ராம் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் போட்டியில், ஐ.ஐ.டி. மெட்ராஸ், எஸ்.ஆர்.எம்., சத்யபாமா, ஹிந்துஸ்தான் உள்ளிட்ட 10 பல்கலை அணிகள், லயோலா, சாய்ராம், கே.எஸ்.ஆர்., ஆகிய மூன்று பொறியியல் கல்லுாரி அணிகள், குருநானக், புதுக்கல்லுாரி, ஆர்.கே.எம்., ஆகிய மூன்று கலை அறிவியல் கல்லுாரி அணிகள் என, மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.
டி - 20 அடைப்படையிலான இப்போட்டியில், சாய்ராம், சென்னை ஐ.ஐ.டி., எஸ்.ஆர்.எம்.பல்கலை, பாண்டிச்சேரி பல்கலை, ஜேப்பியார் பல்கலை, வி.ஐ.டி., பல்கலை, குருநானக் கல்லுாரி மற்றும் ஆர்.கே.எம். விவேகானந்தா கல்லுாரி ஆகிய எட்டு அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இறுதிப் போட்டி மே 1ம் தேதி நடக்கிறது.

