/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாதர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
/
மாதர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 27, 2024 01:17 AM

சென்னைசுதந்திர போராட்ட வீரரான மறைந்த கேப்டன் லட்சுமி சாகல் நினைவு தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு, சென்னையின் தலைமை அரசு மருத்துவமனைகளில், மாதர் சங்கத்தினர் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை மனுவாக, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் அளித்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் ஸ்டான்லி, பெரியார் நகர், ஓட்டேரி, கே.கே., நகர், சைதாப்பேட்டை, ஈஞ்சம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தோம். அங்கு, கடந்த ஆண்டை விட, அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளன.
ஆனால், ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். சில நோய் கண்டறியும் கருவிகள் துருப்பிடித்துள்ளன. திருவொற்றியூர், சைதாப்பேட்டை மகப்பேறு மருத்துவமனைகளில் மருத்துவர், நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
மர்ம நபர்கள், குடிமகன் தகராறு செய்கின்றனர். போதிய மருத்துவர், காவலாளிகளை பணியமர்த்த வேண்டும். அனைத்து மருத்துவமனையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

