/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாக்கரை திருடிய நெல்லை நபர் கார் நம்பரால் சிக்கினார்
/
லாக்கரை திருடிய நெல்லை நபர் கார் நம்பரால் சிக்கினார்
லாக்கரை திருடிய நெல்லை நபர் கார் நம்பரால் சிக்கினார்
லாக்கரை திருடிய நெல்லை நபர் கார் நம்பரால் சிக்கினார்
ADDED : ஏப் 27, 2024 12:24 AM
சிட்லப்பாக்கம், சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ், 67. இவரது தந்தையின் 100வது பிறந்த நாளை கொண்டாட, சில வாரங்களுக்கு முன், குடும்பத்தினருடன் மயிலாப்பூருக்கு சென்றார். அப்போது, அவரது வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
மர்ம நபர்கள், நகை, வெள்ளி பொருட்களை லாக்கரோடு திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து, சிட்லப்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், சம்பவத்தன்று கார் ஒன்று வந்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த கார் எண்ணை வைத்து, ஜமீன்பல்லாவரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுனர் குமரன், 44, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்கிற வெள்ளை செந்தில், 45, என்பவர், காரை புக் செய்து, சம்பவத்தன்று, செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், சிட்லப்பாக்கம் பகுதிகளில் வீடுகளை நோட்டமிட்டது தெரியவந்தது.
அப்போது, ரங்கராஜ் வீடு பூட்டியிருந்ததை பார்த்து, இரவில் வந்து பூட்டை உடைத்து, லாக்கரை துாக்கிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, குமரன் கொடுத்த தகவலின்படி, வெள்ளை செந்திலை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். வெள்ளை செந்தில் மீது, 4 கொலை வழக்கு, 10 கொலை முயற்சி வழக்கு என, 30 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

