நேருக்குநேர் பைக்குகள் மோதி மாணவர் பலி; இருவர் ‘சீரியஸ்’
நேருக்குநேர் பைக்குகள் மோதி மாணவர் பலி; இருவர் ‘சீரியஸ்’
ADDED : ஜூலை 05, 2026 06:52 PM
சேலையூர்: சேலையூர் அருகே நேருக்குநேர் பைக்குகள் மோதிய விபத்தில், கல்லுாரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்; இருவர் படுகாயமடைந்தனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நிதீஷ், 22. இவர், தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள தனியார் கல்லுாரியில் வேளாண்மையியல் நான்காமாண்டு படித்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு நண்பர் சேவாக், 23, என்பவருடன், ‘ராயல் என்பீல்டு’ புல்லட் பைக்கின் பின்னால் அமர்ந்து சென்றார்.
சேலையூர் அருகே அகரம் பிரதான சாலையில் சென்றபோது, எதிர்திசையில் சேலையூரைச் சேர்ந்த மணிகண்டன், 25, என்பவர் ஓட்டி வந்த, யமஹா எம்.டி., பைக் மீது மோதியது. இதில், மூவரும் படுகாயமடைந்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், நிதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சேவாக், மணிகண்டன் ஆகியோர், தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
