கோவிலுக்கு வந்த பெண்ணிடம் தங்க நகை திருடிய பெண் கைது கோவிலுக்கு வரும் பெண்களை குறிவைத்து திருடிய பெண் கைது
கோவிலுக்கு வந்த பெண்ணிடம் தங்க நகை திருடிய பெண் கைது கோவிலுக்கு வரும் பெண்களை குறிவைத்து திருடிய பெண் கைது
ADDED : ஜூலை 03, 2026 04:21 PM
திருவள்ளூர்: புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்த பெண்ணிடம், 5 சவரன் தங்க நகையை திருடிய பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த புட்லுாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, கடந்தாண்டு ஆகஸ்ட் 10ம் தேதி, புதுச்சேரியைச் சேர்ந்த காந்திமதி, 61, என்பவர், குடும்பத்தினருடன் நேர்த்திக்கடன் செலுத்த வந்தார்.
அப்போது, அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகை திருடு போனது. இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இதுதொடர்பாக, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தேசம்மாள், 52, என்பவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோவில்களில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தேசம்மாள் நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அவர் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. தேசம்மாளிடமிருந்து, 1 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
