/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பாடி பில்டிங்' சாம்பியன்ஷிப் சென்னையின் 4 வீரர்கள் தகுதி
/
'பாடி பில்டிங்' சாம்பியன்ஷிப் சென்னையின் 4 வீரர்கள் தகுதி
'பாடி பில்டிங்' சாம்பியன்ஷிப் சென்னையின் 4 வீரர்கள் தகுதி
'பாடி பில்டிங்' சாம்பியன்ஷிப் சென்னையின் 4 வீரர்கள் தகுதி
ADDED : டிச 09, 2025 06:22 AM
சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெறும் தேசிய 'பாடி பில்டிங்' சாம்பியன்ஷிப் போட்டிக்கு, சென்னை ஐ.சி.எப்., அணியில் நான்கு வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர்.
தென்கிழக்கு ரயில்வே சார்பில், 39வது அகில இந்திய ரயில்வே 'பாடி பில்டிங்' சாம்பியன்ஷிப் போட்டி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சக்ரதர்பூரில் இன்று துவங்குகிறது. இதில், நாட்டின் அனைத்து ரயில்வே அணிகளைச் சேர்ந்த, 300-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர்.
அந்த வகையில், தமிழகத்தைச் சார்ந்து போட்டியிடும் ஐ.சி.எப்., அணியில், சென்னையின் நான்கு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். போட்டி, 40 முதல் 100 பிளஸ் வரை, பல்வேறு எடைப் பிரிவுகளில் நடக்கிறது.
இதில், 75 கிலோ எடைப்பிரிவில் ஹரிபாபு, 37; 90 கிலோ எடைப்பிரிவில் விக்னேஷ், 24; 100 கிலோ எடைப்பிரிவில் ஜெயபிரகாஷ், 40; 100 பிளஸ் எடைப்பிரிவில் ராஜ்குமார், 27 ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.