/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
5,000 கல்லீரல் மாற்று சிகிச்சை 'அப்பல்லோ' சாதனை
/
5,000 கல்லீரல் மாற்று சிகிச்சை 'அப்பல்லோ' சாதனை
ADDED : நவ 13, 2025 12:46 AM
சென்னை: அப்பல்லோ மருத்துவமனைகளில், 5,000 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:
அப்பல்லோ மருத்துவமனையில் 1998, நவ., 15ம் தேதி, நாட்டில் முதல்முறையாக குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை அப்பல்லோ மருத்துவ குழுமம் செய்து வருகிறது.
அதன்படி, தெற்கு ஆசியாவில் முதல் முறையாக, 5,000 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்ற சாதனையை படைத்துள்ளோம்.
இந்த சாதனை, இந்திய மருத்துவ துறையில் சாத்தியம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளோம். இவை, எங்கள் மருத்துவர்கள், ஊழியர்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த சாதனையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

