/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆபாச படம் எடுத்து மிரட்டி இளம்பெண்ணிடம் அத்துமீறல் குமரி வாலிபர் கைது
/
ஆபாச படம் எடுத்து மிரட்டி இளம்பெண்ணிடம் அத்துமீறல் குமரி வாலிபர் கைது
ஆபாச படம் எடுத்து மிரட்டி இளம்பெண்ணிடம் அத்துமீறல் குமரி வாலிபர் கைது
ஆபாச படம் எடுத்து மிரட்டி இளம்பெண்ணிடம் அத்துமீறல் குமரி வாலிபர் கைது
ADDED : நவ 13, 2025 12:35 AM
திருவொற்றியூர்: இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை காட்டி மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, 21 வயது இளம்பெண், தனியார் கல்லுாரியில் படிக்கிறார். நான்கு மாதங்களுக்கு முன், 'மோஜ்' செயலி மூலம், கன்னியாகுமரி மாவட்டம், அருமனையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லிபின்ராஜ், 25, என்பவர் அறிமுகமாகிஉள்ளார்.
தொடர்ச்சியாக இருவரும், வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். அப்போது, அந்தரங்கமாக பேசிய புகைப்படங்களை காட்டி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், சென்ட்ரலில் உள்ள லாட்ஜுக்கு அப்பெண்ணை வரவழைத்து, லிபின்ராஜ் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் புகைப்படங்களை காட்டி மிரட்டி, மீண்டும் லாட்ஜுக்கு அழைத்தபோது, அப்பெண் மறுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த லிபின்ராஜ், பெண்ணின் தாய்க்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் தாய், இது குறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த, தனிப்படை உதவி ஆய்வாளர் சிவா தலைமையிலான போலீசார், கன்னியாகுமரி சென்று, லிபின்ராஜை கைது செய்தனர்.
லிபின்ராஜ் மீது, பாலியல் வன்கொடுமை, குற்றவியல் நம்பிக்கை மோசடி, குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு பின், நேற்று அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

