/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
முத்துராமலிங்க தேவராக நடித்த பஷீருக்கு கொலை மிரட்டல்
/
முத்துராமலிங்க தேவராக நடித்த பஷீருக்கு கொலை மிரட்டல்
முத்துராமலிங்க தேவராக நடித்த பஷீருக்கு கொலை மிரட்டல்
முத்துராமலிங்க தேவராக நடித்த பஷீருக்கு கொலை மிரட்டல்
PUBLISHED ON : நவ 02, 2025 12:00 AM
சென்னை: தேசிய தலைவர் படத்தில் முத்துராமலிங்க தேவராக நடித்த ஜெ.எம்.பஷீருக்கு, மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஜெ.எம்.பஷீர் அளித்த பேட்டி:
தேசிய தலைவர் படம், அக்., 30ல் தமிழகம் முழுதும் தியேட்டர்களில் வெளியாகி, ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நான் முத்துராமலிங்க தேவராக நடித்துள்ளேன்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் மர்மநபர்கள் சிலர், என் வீட்டுக்கு வந்து, என் கார் ஓட்டுநர் அழகரை தாக்கிவிட்டு, கார் கண்ணாடிகளை உடைத்தனர். என்னை கொலை செய்யப்போவதாகவும் மிரட்டினர். 'முத்துராமலிங்க தேவராக நடிப்பது இழிவு' என, கடுமையாக திட்டினர்.
வளசரவாக்கம் காவல்நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மர்மநபர்கள் மிரட்டிய வீடியோ பதிவு உள்ளது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.