/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடிகர் ரஜினி வீடு உட்பட 15 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
நடிகர் ரஜினி வீடு உட்பட 15 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் ரஜினி வீடு உட்பட 15 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் ரஜினி வீடு உட்பட 15 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : நவ 14, 2025 02:33 AM
சென்னை: நடிகர் ரஜினி வீடு, தொலைக்காட்சி அலுவலகங்கள் உட்பட 15 இடங்களுக்கு, 'இ - மெயில்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்தது.
அதில், 'தந்தி' டிவி, 'புதிய தலைமுறை' டிவி, போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினி வீடு, சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா விஜயகாந்த் வீடு, நீலாங்கரையில் உள்ள நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதேபோல், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், பா.ஜ., பிரமுகர் ஹெச்.ராஜா, நடிகை சாக் ஷி அகர்வால், நடிகர் அருண்பாண்டியன் மற்றும் தனியார் பள்ளி உட்பட 15 இடங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடங்களுக்கு போலீசாருடன் விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவி யுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் எந்தவித வெடிப்பொருட்களும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் 'இ - மெயில்' முகவரி குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

