மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் சென்னை பல்கலை
மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் சென்னை பல்கலை
ADDED : ஜூலை 08, 2026 07:02 AM

அ நிறம் | அளவு
சென்னை பல்கலையில் இளநிலை தேர்வு முடிவுகள் வராத நிலையில், முதுநிலை சேர்க்கையை முடித்து, வகுப்புகளை தொடங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் செயல். ஒருவேளை தேர்வில் தோல்வியுற்றால், மாணவர்கள் வெளியேற்றப்படுவர் என்ற அறிவிப்பு பொறுப்பற்றது. இதனால், மாணவர்களின் கல்வி கட்டணம், ஓராண்டு உழைப்பு, எதிர்காலம் வீணாகும். முதல்வர் விஜய் அரசின் கண்காணிப்பு குறைபாடே, பல்கலை விதிமீறல்களுக்கு காரணம்.
பல்கலை நிர்வாகமும், உயர் கல்வி துறையும் தலையிட்டு, தவறான நடைமுறையை திரும்ப பெற வேண்டும். இளநிலை தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டு, அதன்பின் முதுநிலை மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
- நயினார் நாகேந்திரன், பா.ஜ., தமிழக தலைவர்.
