/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 வழக்கறிஞர்கள் திடீர் நீக்கம் சி.எம்.டி.ஏ., உத்தரவு
/
2 வழக்கறிஞர்கள் திடீர் நீக்கம் சி.எம்.டி.ஏ., உத்தரவு
2 வழக்கறிஞர்கள் திடீர் நீக்கம் சி.எம்.டி.ஏ., உத்தரவு
2 வழக்கறிஞர்கள் திடீர் நீக்கம் சி.எம்.டி.ஏ., உத்தரவு
ADDED : மார் 20, 2024 12:12 AM
சென்னை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வந்த, இரண்டு வழக்கறிஞர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
சி.எம்.டி.ஏ., சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் நடந்து வருகின்றன.
மேலும், திட்ட அனுமதி, கட்டட வரன்முறை, பணியாளர் நிர்வாகம் தொடர்பாகவும் வழக்குகள் நடந்து வருகின்றன.
இதில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட பிளீடர்கள் ஆஜராவார்கள். இருப்பினும், சி.எம்.டி.ஏ., வழக்குகளுக்கு என, 13 வழக்கறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
சி.எம்.டி.ஏ., குழும ஒப்புதல் அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மாற்றம் செய்வதற்கு, குழுமத்தின் ஒப்புதல் தேவை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சி.எம்.டி.ஏ., சார்பில் வழக்குகளில் ஆஜராகி வந்த, சி.என். வினோபா, ஒய். புவனேஷ் குமார் ஆகியோரை திடீரென நீக்கி, உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் கவனித்து வந்த வழக்குகளை, இனி பி. வீனா சுரேஷ், ஆர். சிவகுமார் ஆகியோர் கவனிப்பார்கள் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

