/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.எம்.நார்ம்ஸ் செஸ் போட்டி க்யூபா வீரர் 'சாம்பியன்'
/
ஐ.எம்.நார்ம்ஸ் செஸ் போட்டி க்யூபா வீரர் 'சாம்பியன்'
ஐ.எம்.நார்ம்ஸ் செஸ் போட்டி க்யூபா வீரர் 'சாம்பியன்'
ஐ.எம்.நார்ம்ஸ் செஸ் போட்டி க்யூபா வீரர் 'சாம்பியன்'
ADDED : நவ 13, 2025 12:40 AM

சென்னை: பல திருப்பங்களும், கடும் மோதல்களும் நடந்த ஐ.எம்., நார்ம்ஸ் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், க்யூபாவின் ஜார்ஜ் மார்கோஸ் தன் அசாத்திய ஆட்டத்தால் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், 35வது ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு செஸ் போட்டி, சென்னையில் நேற்று நிறைவடைந்தது.
போட்டியில், ஐந்து இந்திய வீரர்களும், மற்ற நாட்டு வீரர்களும் நேரடியாக மோதினர். நேற்று நடந்த, இறுதி சுற்றில், க்யூபாவின் ஜார்ஜ் மார்கோஸ், பெரு நாட்டின் கார்லோமாக்னோ ஒப்லிடாஸ் மோதினர். இதில், 21வது நகர்வில் வெற்றி வெற்ற ஜார்ஜ் மார்கோஸ், மொத்தம் 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
நிறைவு விழாவில், கிராண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர், வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்வில், 'பிடே' முன்னாள் துணைத் தலைவர் சுந்தர், மாநில சதுரங்க சங்கச் செயலர் ஸ்டீபன் பாலசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

