/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜூனியர் 'சாப்ட் பால்' போட்டி :சென்னை அணிக்கு வெண்கலம்
/
ஜூனியர் 'சாப்ட் பால்' போட்டி :சென்னை அணிக்கு வெண்கலம்
ஜூனியர் 'சாப்ட் பால்' போட்டி :சென்னை அணிக்கு வெண்கலம்
ஜூனியர் 'சாப்ட் பால்' போட்டி :சென்னை அணிக்கு வெண்கலம்
ADDED : டிச 09, 2025 06:23 AM

சென்னை: மாநில ஜூனியர் 'சாப்ட் பால்' சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் பிரிவில், சென்னை மாவட்ட அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
தமிழ்நாடு 'சாப்ட் பால்' சங்கம் சார்பில், 11வது மாநில அளவிலான ஜூனியர் 'சாப்ட் பால்' சாம்பியன்ஷிப் போட்டி, ஈரோட்டில் கடந்த 5ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இப்போட்டியில், சென்னை, மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, இருபாலரிலும் தலா 22 அணிகள் பங்கேற்றன.
'லீக்' மற்றும் 'நாக் அவுட்' அடிப்படையில் போட்டிகள் நடந்தன.
அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்களில் சேலம் முதலிடத்தையும், கிருஷ்ணகிரி இரண்டாமிடத்தையும் வென்றன.
அதே போல், மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், சென்னை மாவட்ட அணி, 9 - 7 என்ற கணக்கில், பெரம்பலுார் அணியை தோற்கடித்து, வெண்கலப் பதக்கம் வென்றது.
பெண்கள் பிரிவில், திருச்சி, சேலம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் முறையே, முதல் மூன்று இடங்களை கைப்பற்றின.
வெண்கலம் வென்ற சென்னை அணியில், ஸ்ரீஜித் சர்ளமா 16, சஞ்சித் சர்மா, 17, புருஷோத்தமன், 16, சத்தி கைலாஷ், 16, பரத்வாஜ், 15, விதுார் ஹரிஷ், 16, தர்ஷன், 15, பிரமேஷ் மாணிக், 16, அனிருத், 13, சஞ்சய் ராஜ், 16, புவன் சக்திவேல், 16, ரோஷன், 15, ஹரிகிருஷ்ணன், 16, ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

