/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குறுங்காலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
குறுங்காலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : டிச 09, 2025 06:28 AM

கோயம்பேடு: கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் நேற்று, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
கோயம்பேடில் பிரபலமான குறுங்காலீஸ்வரர் கோவிலில், சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன.
இப்பணிகள் முடிந்த நிலையில், கடந்த 4ம் தேதி விக்னேஸ்வர பிரார்த்தனையுடன், கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது.
நேற்று காலை 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, 5:30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடந்தது.
தொடர்ந்து 6:30 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் விமானம் மற்றும் அனைத்து விமான கலசங்களிலும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு, அறம்வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ குறுங்காலீஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தொடர்ந்து வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அகிலாண்டேசுவரி அம்மை உடனுறை அகத்தீ ஸ்வரர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகமும், நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

