/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நங்கநல்லுாரில் இசைத்திருவிழா நாளை துவக்கம்
/
நங்கநல்லுாரில் இசைத்திருவிழா நாளை துவக்கம்
ADDED : டிச 09, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கநல்லுார்: மார்கழி மாதத்தை முன்னிட்டு, ஸ்ரீ பவமான் அன்னதானம் டிரஸ்ட் ஆண்டு தோறும் இசை திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான, 12 நாள் இசைத் திருவிழா, நாளை மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது.
பிரபலங்களான சிக்கல் குருசரண், விஷாகா ஹரி, பிரியா சகோதரியர், மஹதி, ராஜேஷ் வைத்தியா, சித் ஸ்ரீராம் உள்ளிட்ட கலைஞர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
தினமும் மாலை 4:30 மணிக்கு ஒரு நிகழ்ச்சி, மாலை 6:30 மணிக்கு மற்றொரு நிகழ்ச்சி என, இரு நிகழ்ச்சிகளாக நடத்தப்பட உள்ளது.

