/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நாளை நந்தி கல்யாணம்
/
ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நாளை நந்தி கல்யாணம்
ADDED : மார் 18, 2024 01:16 AM
பள்ளிக்கரணை:சிவபெருமானின் மெய்க்காப்பாளரான நந்தியம் பெருமாள் - சுயம்பிரகாசாம்பிகையின் திருக்கல்யாணம், பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோவிலில் மார்ச் 19ல் நடக்கிறது.
விழா நிர்வாகி கூறியதாவது:
நாளை மாலை 4:30 மணிக்கு பள்ளிக்கரணை லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை ஊர்வலம் புறப்பட்டு, சிவன் கோவிலை வந்தடைகிறது.
தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு நாதஸ்வரம், கயிலாய வாத்தியம் முழங்க, நந்தியம் பெருமாள் - சுயம்பிரகாசாம்பிகை திருக்கல்யாணம், தீபாராதனை நடக்க உள்ளது.
பின், திருமண விருந்தும் தொடர்ந்து, இரவு 8:30 மணிக்கு நந்தியம் பெருமான் தம்பதியின் மணக்கோல வீதியுலாவும் நடக்கிறது.
அரியலுார் மாவட்டம், திருமழபாடியைத் தொடர்ந்து பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் மட்டுமே, நந்தி கல்யாணம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

