/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகளுக்கான தேசிய நீச்சல் 'டால்பின்' மாணவர்கள் சாதனை
/
பள்ளிகளுக்கான தேசிய நீச்சல் 'டால்பின்' மாணவர்கள் சாதனை
பள்ளிகளுக்கான தேசிய நீச்சல் 'டால்பின்' மாணவர்கள் சாதனை
பள்ளிகளுக்கான தேசிய நீச்சல் 'டால்பின்' மாணவர்கள் சாதனை
ADDED : டிச 09, 2025 06:45 AM

சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான தேசிய விளையாட்டு போட்டிகளில், நீச்சலில் எஸ்.டி.ஏ.டி., டால்பின் அகாடமி வீரர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
மத்திய அரசின் பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநரகம் சார்பில், 69வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள், டில்லியில் நடந்தன.
நீச்சல் போட்டியில், முகப்பேரை சேர்ந்த எஸ்.டி.ஏ.டி., டால்பின் அகாடமி மாணவர்கள், ஆறு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
அதன்படி, 14 வயது பிரிவில் பங்கேற்ற ஆர்யா சத்தார், 50 மீ., 100 மீ., 200 மீ., 'பேக் ஸ்ட்ரோக்' பிரிவுகளில் தலா ஒரு தங்கமும், 4x100 மெட்லே ரிலேவில் தேசிய சாதனையுடன் ஒரு தங்கமும் கைப்பற்றினார்.
அதேபோல், 17 வயதில் பங்கேற்ற கோகுலன், 4x100 மெட்லே ரிலே மற்றும் 4x100 ப்ரீஸ்டைல் ரிலே ஆகிய இருபிரிவிலும் புதிய சாதனை படைத்து, தலா ஒரு தங்கம் வென்றார். மேலும், 100 மீ., 200 மீ., பேக் ஸ்ட்ரோக் பிரிவில், தலா ஒரு வெள்ளி வென்றார்.
அதே போல், 19 வயது பிரிவில், ஸ்ரீஹரி, 4x100 மெட்லே ரிலே மற்றும் 4x100 ப்ரீஸ்டைல் ரிலேவில் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றார்.

