/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய டேபிள் டென்னிஸ்: சென்னை வீரர்கள் அசத்தல்
/
தேசிய டேபிள் டென்னிஸ்: சென்னை வீரர்கள் அசத்தல்
ADDED : நவ 14, 2025 11:55 PM

சென்னை: ஹரியானாவில் நடந்து வரும் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில், தமிழக அணியின் சென்னை வீரர்கள் அக் ஷயு பூஷண், சஞ்சய் அரவிந்த் ஆகியோர், தங்கம் மற்றும் வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர்.
இந்திய டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், தேசிய அளவில் நான்காவது யூ.டி.டி., டேபிள் டென்னிஸ் தரவரிசை சாம்பியன்ஷிப் போட்டி, ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலாவில் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் அரையிறுதி போட்டியில், சென்னையின் அக் ஷயு பூஷண், 13, சஞ்சய் அரவிந்தை, 13, எதிர்த்து போட்டியிட்டார். இதில் அக் ஷயு பூஷண் 3 - 0 என்ற செட் கணக்கில் வென்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இறுதி போட்டியில் அக் ஷயு பூஷண், மஹாராஷ்டிராவின் பட்டேகர் நிலாய் மோதினர். இதில் அக் ஷயு பூஷண் 3 - 1 என்ற செட் கணக்கில் பட்டேகர் நிலாயை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். வெண்கலப் பதக்கத்தை, சென்னையின் சஞ்சய் அரவிந்த் கைப்பற்றினார்.

