/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓபன் டேபிள் டென்னிஸ் சென்னை வீரர் வெற்றி
/
ஓபன் டேபிள் டென்னிஸ் சென்னை வீரர் வெற்றி
ADDED : நவ 14, 2025 03:17 AM

சென்னை: சேலத்தில் நடந்த ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னை வீரர் எத்திராஜன் வெற்றி பெற்றார்.
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத்தின் சார்பில், ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி, சேலத்தில், கடந்த 8, 9ம் தேதிகளில் நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த லீக் போட்டியில், சென்னை வீரர் எத்திராஜன், மதுரை வீரர் சுரேஷ்குமார் மற்றும் ஓ.என்.ஜி.சி., வீரர் பாஸ்கரன் ஆகியோருடன் காலிறுதியில் மோதினார். அதில், தலா 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.
இறுதி போட்டியில், சென்னை வீரர் திப்ஜிட்டுடன் மோதி, 3 - 0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இவருக்கு, தமிழ்நாடு டேபிள் சங்க தலைவர் கண்ணபிரான், பரிசு வழங்கி பாராட்டினார்.

