/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பீலிக்கான் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
பீலிக்கான் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பீலிக்கான் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பீலிக்கான் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : டிச 09, 2025 06:25 AM

மணலி: மணலி, பர்மா நகர், ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் - அங்காள ஈஸ்வரி கோவில், அரை நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோவில், ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.
முன்னதாக, மூன்று நாட்களாக, யாக சாலை பூஜை, கோபூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, நேற்று காலை, கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, யாகம் வளர்க்கப்பட்டது. மஹா பூர்ணாஹூதி முடிவுற்று, கடம் புறப்பாடாகின.
செண்டை மேளம் மற்றும் மங்கள வாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்க, புனித நீர் விமான கலசங்களில் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
பின், முனீஸ்வரர், அங்காள ஈஸ்வரி, பரிவார தெய்வங்களாகிய விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, வராஹி அம்மன், பைரவர், அய்யப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரங்களுக்கு, புனித நீர் ஊற்றி, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், கிராம நிர்வாகி சத்தியசீலன் உட்பட, கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 'ஓம் சக்தி... பராசக்தி' என, விண்ணதிர முழங்கியபடி சுவாமி தரிசனம் செய்தனர்.

