/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துறைமுக ஊழியர்கள் டிச., 1 முதல் 'ஸ்டிரைக்'
/
துறைமுக ஊழியர்கள் டிச., 1 முதல் 'ஸ்டிரைக்'
ADDED : நவ 13, 2025 12:45 AM
சென்னை: மும்பை, சென்னை, துாத்துக்குடி, கொல்கட்டா, கோவா, கொச்சி உட்பட, 12 துறைமுகங்களில், அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், கூலி தொழிலாளர்கள் என, 80,000 பேர் நேரடியாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு, சமீபத்தில் புதிய ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், ஊதிய உயர்வை தவிர, மற்ற பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனக்கூறி, துறைமுக ஊழியர்கள் நேற்று, நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை துறைமுக வளாகத்தில், சி.ஐ.டி.யு., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து, இந்திய நீர் வழி போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலர் நரேந்திர ராவ் கூறியதாவது:
வரும் டிச., 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஐந்து தொழிற்சங்கங்களும் முடிவு செய்துள்ளோம். இதற்கான, நோட்டீஸ் வரும் 14ம் தேதி நிர்வாகத்திடம் அளிக்க உள்ளோம். மத்திய அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

