/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர்வழிப்பாதையை மூடியதால் கிழக்கு தாம்பரத்திற்கு வெள்ள அபாயம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
/
நீர்வழிப்பாதையை மூடியதால் கிழக்கு தாம்பரத்திற்கு வெள்ள அபாயம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
நீர்வழிப்பாதையை மூடியதால் கிழக்கு தாம்பரத்திற்கு வெள்ள அபாயம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
நீர்வழிப்பாதையை மூடியதால் கிழக்கு தாம்பரத்திற்கு வெள்ள அபாயம் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
ADDED : நவ 13, 2025 12:33 AM
தாம்பரம்: அரசு நிலத்தில் உள்ள நீர்வழிப்பாதையை மூடியதால், கிழக்கு தாம்பரம் பகுதி வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் சார்பில், செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தாம்பரம் சானடோரியம் மேம்பாலம் அருகில், சிட்லப்பாக்கம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட, சேலையூர் வருவாய் கிராமத்தின் எல்லையில், ஏரிக்கரை தெரு - பாரதமாதா தெரு சந்திப்பில் இயற்கையான நீர்வழிப்பாதை உள்ளது.
அங்கு, அசுர வேகத்தில் நடந்து வரும் தனியார் கட்டுமான பணி காரணமாக, இந்த கால்வாயை நிரந்தரமாக மூடிவிட்டனர். இதனால், சிட்லப்பாக்கம் ஏரிக்கு செல்லும் மழைநீர் தடுக்கப்பட்டு, சாதாரண மழைக்கே, 500க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் தட்சமானிய புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த மக்களை, ரயில்வேக்கு சொந்தமான நிலம் எனக்கூறி, அத்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.
ஆனால், அந்த நிலம் ரயில்வேக்கு சொந்தமானது இல்லை என, தாம்பரம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, ரயில்வே செய்த மேல்முறையீட்டிலும், தாம்பரம் துணை நீதிமன்றம் விரிவாக விசாரித்து, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்பட்டதை ஒட்டி, ஏராளமான வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் தேவைப்படுவதால், மீண்டும் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்த மக்களை அப்புறப்படுத்த ரயில்வே துறை முயன்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என, அப்பகுதியில் வசிப்போர் கூறியதால், ரயில்வே அதிகாரிகள் பின்வாங்கினர்.
பின், உயர் நீதிமன்றம் வழிகாட்டிய எந்த ஒரு நடைமுறையையும் பின்பற்றாமல், அங்கிருந்த குடியிருப்புகளை இடித்தனர்.
தொடர்ந்து, அரசு நிலத்தை, ரயில்வே துறை தன்னுடையதாக மாற்றி, குறுகலான சாலை வசதியுள்ள இப்பகுதியை, தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளது.
அந்த தனியார் நிறுவனம் அங்கு இருந்த இயற்கையான நீர்வழிப்பாதையை மூடி, ஆக்கிரமித்து, வேகமாக கட்டுமானங்களை கட்டி வருகிறது.
இதனால், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

