/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாசிக் மெலடியில் நவீன இசை கவனம் ஈர்க்கும் 'ராக் உத்சவ்' குழு
/
கிளாசிக் மெலடியில் நவீன இசை கவனம் ஈர்க்கும் 'ராக் உத்சவ்' குழு
கிளாசிக் மெலடியில் நவீன இசை கவனம் ஈர்க்கும் 'ராக் உத்சவ்' குழு
கிளாசிக் மெலடியில் நவீன இசை கவனம் ஈர்க்கும் 'ராக் உத்சவ்' குழு
ADDED : டிச 07, 2025 05:34 AM

சென்னை: 'கிளாசிகல் மெலடி'யை நவீன இசையுடன் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார், 'ராக் உத்சவ்' இசை குழு நிறுவனர், சாம்பசிவம் கைலாசம்.
இவர், பழங்கால பாடல்களில் சிறந்த பல்லவி, சரணம் உள்ளிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து, அவற்றை நவீன பரிமாணத்தில் புத்துயிர் அளித்து தனிப்பாடலாக இசை பிரியர்களுக்கு வழங்கி வருகிறார்.
இம்முறை அவர், நடபைரவி, கல்யாணி, சங்கராபரணம், மோகனம் மற்றும் மாயமாளவ கவுளை ஆகிய ஐந்து தனிப்பாடல்களை உருவாக்கி, தன் 'ராக் உத்சவ்' என்ற யு - டியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் இவர், 'நடபைரவி' ராகத்தில் தனிப்பாடல் வெளியிட்டார். இதில் 'ஸ்ரீவல்லி தேவசேனாபதி' பாடலின் ஸ்வரம், இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேபோல், 'ராசாத்தி உன்ன, கண்ணன் வந்து பாடுகிறான்' ஆகிய பாடல்களை, தன் குரல் வளத்தால் புது அனுபவத்தை வழங்கியுள்ளார்.
மின்னலே படத்தின் 'வசீகரா' பாடலை, 'வசீகரி' என, ஆணின் கோணத்தில் பாடி வசீகரித்துள்ளார். இப்படி, 1970களில் துவங்கி, திரையில் நாம் கேட்டு ரசித்த பாடல்களை, நவீன பரிமாண இசையில் உயிர்ப்பித்து, தனிப்பாடல்களாக இவர் வெளியிடுவது வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பாடல்களை 'ராக் உத்சவ்' எனும் பெயரில் உள்ள யூ - டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், ரசிகர்கள் கேட்டு ரசிக்கலாம்.
இவரது இசைக்குழுவில், சங்கீத் தாமஸ், எம்.எஸ்.வி .ராஜா, சைமன் அகஸ்டின், தீபக் பரமசிவன், பிருத்வா கலீப், அத்வைத் பட்னாயக், நிதிஷ் அம்மன்னயா, சுபா சந்தோஷ், கார்த்திக் வைதாத்ரி, கார்த்திக் கி ருஷ்ணா, 'பெங்களூர் ஸ்ட்ரிங் என்செம்பிள்' மற்றும் 'ஸ்ரீநிதி ஓம்கார்' ஆகி யோரின் பங்கு வரவேற்கத்தக்கது.

