/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவல்லிக்கேணி தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து அவதி
/
திருவல்லிக்கேணி தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து அவதி
திருவல்லிக்கேணி தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து அவதி
திருவல்லிக்கேணி தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து அவதி
ADDED : மார் 15, 2024 12:23 AM

திருவல்லிக்கேணி,திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட வி.ஆர்.பிள்ளை தெரு, கஜபதி தெரு, கஜபதி லாலா சந்து, ராஜாஜி நகர், அனுமந்தபுரம் பகுதிகளில், குடிநீர் வாரியம் சார்பில் வீடுகளுக்கு இணைப்பு கொடுத்து, அடி பம்ப் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அனைத்து வீடுகளிலும், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து நேற்று, அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு, பெசன்ட் சாலையிலுள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அங்கு ஊழியர்கள் தவிர்த்து, அதிகாரிகள் யாரும் இல்லை.
அரை மணி நேரம் கழித்து வந்த குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் மனுவை வாங்கியுள்ளார். பாட்டிலில் கொண்டு சென்ற, கழிவுநீர் கலந்த குடிநீரையும் அவரிடம் காட்டியுள்ளனர். அப்போது, உடனடி நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரி உறுதியளித்து உள்ளார்.